சென்னை பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்த கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.