Skip to content

மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3500 தருவதாக அறிவித்திருந்த நிலையில் அதனைப் பற்றி சிந்திக்காமல், போராட்டம் நடத்திய
பஞ்சாப் விவசாயிகளை ராணுவத்தைக் கொண்டு கைது செய்யப்பட்ட அடக்கு முறையை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 5 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக
ரயில் நிலையம் முன்பு டிஎஸ்பி பாலாஜி தலைமையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண கூடத்துக்கு வேன் மூலம் ஏற்றுச் செல்லப்பட்டனர்.

error: Content is protected !!