சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் இன்று நடந்தது. கூட்டம். தொடங்கியதும், மறைந்த காங்கிரஸ் எம். எல்.ஏ. இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவரும் காங்கிரஸ் கவுன்சிலருமான
சிவராஜசேகரன் கொண்டு வந்தார். அப்போது அவர் பெரியாரின் மரபுவழி பேரனுக்கு, பெரியாரின் கொள்கை வழி பேரன் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் அரசு சார்பில் மரியாதை செலுத்தியதை நன்றியுடன் நினைக்கிறோம் என்றார்.
அதை தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.