2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அந்த உரை என்பது தமிழக அரசு தயாரித்து கொடுப்பது. அதை அப்வபடியே படிப்பது தான் ஆளுநரின் பணி. ஆனால் கவர்னர் ரவி இன்று தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை மாற்றி தன் இஷ்டத்துக்கு படித்தார்.
தமிழ்நாடு என்ற வாசத்தை பல இடங்களில் அவர் உச்சரிக்கவில்லை. அத்துடன் திராவிட மாடல் என்பதையும், பெரியார். அபம்பேத்கர், அண்ணா என்ற பெயர்களையும், தமிழ்நாடு அமைதிப்பூங்வாவாக திகழ்கிறது என்பதையும் படிக்காமல் விட்டு விட்டார். ஆங்கிலத்தில் தமிழ்நாடு கவர்மென்ட் என்ற இருந்ததை திஸ் கவர்மென்ட் என படித்தார். ஆளுநரின் இந்த போக்குக்கு தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு படித்ததும், கவர்னர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுியதாவது, அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை கவர்னர் முறையாக படிக்கவில்லை. அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை முதல்வர் படிக்க வேண்டும் என்று கூறி ஆளுநனரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் குற்றம் சாட்டினார். இவ்வாறு முதல்வர் தொடர்ந்து பேசியதால் கவர்னர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.