டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றதாகவும் ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்
“எனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன். மேலும் அந்தச் செய்திகள் உண்மைத்தன்மை அற்றவை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எனது வயது தொடர்பான உடல்நலப் பரிசோதனை மட்டுமே நான் தற்போது மருத்துவமனையில் செய்து வருகிறேன். கவலைப்படும்படி எவ்வித பிரச்னையும் இல்லை.
நான் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மக்களும், ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.