திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு செல்போனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உணவுப்பொருட்கள் வழங்கல் தனி தாசில்தார் சத்யபாபா, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கடந்த 20 ம் தேதி அன்று சாதிக் என்கிற அன்வர் பாஷா என்பவரை ரேஷன் அரிசி 85 மூட்டையை கைப்பற்றி அவரை கைது செய்தனர். அதே இடத்தில் அவரது மனைவி மினிலாரியில் 21 மூட்டை ரேஷன் அரிசியை கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் அவரையும் மினி லாரியையும் பிடித்தனர்.