Skip to content

ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

  • by Authour

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தஞ்சை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி சரவணன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!