திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் ஊராட்சி, பளுர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட
ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, கலைச்செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் மரகதவள்ளி, கூத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.