அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி, தட்டாஞ்சாவடி அங்கன்வாடி மையம், அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையம், திருமழபாடி ஊராட்சி ஒன்றிய துவக்கிப்பள்ளி சத்துணவு மையம் மற்றும் திருமழபாடி, மஞ்சமேடு மற்றும் திருமானூர் பகுதிகளில்
உள்ள நியாயவிலைக்கடைகள் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.