திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஜங்ஷனில் இருந்து பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலக்கல்கண்டாகோர்ட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜிராணுவ காலனி, அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட் வழியாக சர்வீஸ் ரோட்டைகடந்து சென்று பொன்மலை ஜி கார்னர் வழியாக சென்றாக வேண்டும். அதேபோல் தஞ்சையில் இருந்து திருச்சி நகரத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் இருந்து குதியில் இருந்து ஜங்ஷன் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றால் அந்த சர்வீஸ் ரோட்டை கடந்து செல்ல வேண்டும். குறிப்பாக பொன்மலை ரயில்வே ஒர்க்ஷாப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த சர்வீஸ் ரோட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். இருவழி போக்குவரத்தை கொண்ட இந்த பொன்மலை சர்வீஸ் ரோடு வழியாக தான் நூற்றுக்கணக்கான ஜமால் கல்லூரி மாணவர்களும் சென்று வருகின்றனர். இப்படியாக மிக முக்கியமான இந்த சர்வீஸ் ரோட்டில் ரதிமீனா பார்சல் சர்வீஸ் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு அதிகாலை துவங்கி மதியம் வரையிலும் பின்னர் மாலை துவங்கி நள்ளிரவு வரை பார்சலை எடுக்கவும் கொடுக்கவும் என மினிலாரி முதல் பெரிய டிரக் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றனர். மிகவும் குறுகலான இருவழிப்பாதையான ஜீ கார்னர் சர்வீஸ் ரோட்டில் இந்த பார்சல் லாரிகள் வரிசையாக மணிகணக்கில் நின்று கொள்வதால் பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சுமார் ஒருவருடகாலமாக இந்த வழியாக செல்லும் வானங்கள் இந்த ரதிமீனா பார்சல் வாகனங்களால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றன. இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் ரமேஷ், கொட்டப்பட்டு தர்மராஜ் உள்ளிட்டோர் பேசியிருக்கின்றனர். பொதுமக்களின் முக்கியமான இந்த பிரச்சனை குறித்து பல்வேறு தரப்பினரும் மாநகர போலீசாரிடம் புகார் குறித்தும் கண்டுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் அவ்வழியாக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சென்று வந்தும் யாரும் கண்டுக்கொள்வது ஏன் என்பது தான் தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள்..