ஒரத்தநாடு அருகே நிச்சயதார்த்த விழாவில் 15 டிராக்டர்களுடன் பிரமாண்டமாக சீர் வரிசை கொண்டு செல்லப்பட்டது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம், ராஜா ராணி event உரிமையாளர் திருந்தையனுக்கும், மலேசியா தொழிலதிபர் சிவகுருநாதன் லாதாவின் மகள் தினோஷாவிற்கும் நிச்சயதார்த்த விழா ஒரத்தநாடு அருகே உள்ள அம்மா மண்டபத்தில்
நடைபெற்றது. மாப்பிள்ளையின் சொந்த ஊரான அருமுலையிலிருந்து சுமார் 500 சீர் வரிசைகளை 15 ட்ராக்டரில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டபத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் ஆரவாரமாக மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த ஒரு பிராமாண்ட காட்சி அப்பகுதியில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.