சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும், ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவுமின்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா போலீஸ் ஸ்டேசன் இருந்தும் போக்குவரத்து போலீசார் அங்கு இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ததுடன் ராதாகிருஷ்ணன் சுனாமி தினத்தியொட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
