அஜித் தற்போது வெளிநாட்டு பைக் டூரில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் நேபாளத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் தற்போது நேபாளத்திலிருந்து பூடான் நாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு அவர் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களுடன் இணைந்து எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் பூடான் நாட்டில் அஜித் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரது தீவிர ரசிகர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ரசிகர் எதிரே வந்த லாரியை கவனிக்காமல் வந்ததை அடுத்து அஜித் அவருக்கு லாரி வருவதை சைகை மூலம் காட்டினார். இதனை அடுத்து அந்த ரசிகர் சுதாரித்து விபத்தில் இருந்து தப்பினார். இதனால் அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்தின் மனிதாபிமானம் குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் அந்த ரசிகர் உடன் இணைந்து அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் அஜித் பூட்டானுக்கு சென்ற போது அங்கு நடிகர் பூட்டான் நடிகர் கெல்லி டார்ஜி என்பவரை சந்தித்துள்ளார். அவர் ஏற்கனவே அஜித் நடித்த ’அசல்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’விடாமுயற்சி’ என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.