Skip to content
Home » வேலைக்காரர்கள் கால்களை தொட்டு வணங்கும் நடிகை

வேலைக்காரர்கள் கால்களை தொட்டு வணங்கும் நடிகை

  • by Authour

‘புஷ்பா’ படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் படம் பற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி… சாமி…’ பாடல் மிகவும் பிரபலமானது. இதில் ராஷ்மிகா மந்தனாவின் ஆட்டத்தை பலரும் விரும்பினர்.வீட்டு

சமீபத்தில் ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா டுவிட்டரில் பதில் அளித்தார். ரசிகர் ஒருவர் கேள்விக்கு ராஷ்மிகா அளித்த பதிலில் “நான் பல முறை சாமி சாமி ஸ்டெப் செய்துவிட்டேன் பெரியவரே.. ஏன் என்னை இப்படி செய்கிறீர்கள்.. ?? என்னை சந்திக்கும் போது வேறு ஏதாவது கேளுங்கள் என கூறினார்.

நீங்கள் மலையாள சினிமாவை ரசிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் பதிலளித்தார், “நீங்கள் கேலி செய்கிறீர்களா…! மலையாள சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும் .. மலையாள படங்கள் மிகவும் தூய்மையானவை, மக்கள் முழு அன்பு கொண்டவர்கள் என கூறினார். அவர் தினமும் தனது வீட்டு உதவியாளரின் கால்களைத் தொட்டு வணங்குவதாகவும் மக்களிடையே பாகுபாடு காட்ட விரும்பவில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து ராஷ்மிகா கூறியதாவது:- சிறிய விஷயங்கள் எனக்கு முக்கியம். நான் எழுந்ததும் என் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுகிறேன், என் நண்பர்களைச் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, அவை ஒரு நபரை உருவாக்கவோ அல்லது கொல்லவோ முடியும், அதனால்தான் யாராவது ஏதாவது சொன்னால், அது முக்கியமானதாக நான் நினைக்கிறேன். நான் என் டைரியில் மிகச்சிறிய விவரங்களை பதிவு செய்து வருகிறேன். வீட்டிற்கு வந்தால் நான் அனைவரின் பாதங்களையும் மரியாதையுடன் தொட்டு வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன், நான் எங்கள் வீட்டு உதவியாளர்களின் கால்களைத் தொட்டுவணக்குகிறேன். ஏனென்றால் நான் யாரையும் வேறுபடுத்த விரும்பவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன் என கூறி உள்ளார். ராஷ்மிகா கடைசியாக மிஷன் மஜ்னுவில் நடித்தார், இது ஜனவரி 20 அன்று நெட்பிக்ஸ் இல் திரையிடப்பட்டது. ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் வெளியீட்டிற்காக ராஷ்மிகா காத்திருக்கிறார். இதை சந்தீப் வங்கா இயக்குகிறார். புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *