2016ல் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா, ஆறு வருடங்களில் அபாரமாக வளர்ந்துள்ளார். நடிகை ராஷ்மிகா சினிமாவில் இவ்வளவு உயரத்தை எட்டுவதற்கு பின்னால் வலி நிறைந்த ஒரு கதை இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம். கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. இப்படத்தை காந்தார டைரக்டர் ரிஷப் ஷெட்டி இயக்கி இருந்தார். இப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். படத்தில் நடித்தபோது ராஷ்மிகா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இடையே காதல் உருவானது.
படம் வெளியான பிறகு, இருவரும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். 2017ம் ஆண்டு ராஷ்மிகாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. முன்னதாக இவர்களது நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்றது. நடிகை ராஷ்மிகாவுக்கு அப்போது 21 வயதுதான். ஆனால் ரக்ஷித் ஷெட்டி ரஷ்மிகாவை விட 13 வயது மூத்தவர். இதை பொருட்படுத்தாமல் காதலித்து திருமணத்துக்கு தயாராகிவிட்டனர்.
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டில், இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்து பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தனர். நிச்சயதார்த்தத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்து உறவை முறித்துக் கொண்டனர். இந்த காதல் மோதல்தான் ராஷ்மிகாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
ரக்ஷித் ஷெட்டியிடம் பிரிந்த பிறகு ராஷ்மிகாவின் திரையுலக வாழ்க்கை தொடங்கியது, இன்று அவர் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகையாக உள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகையாக வலம் வந்தாலும். அவரை சுற்றி எப்போதும் காதல் வதந்திகள் பரவி வருகின்றன. ரக்ஷித் ஷெட்டியுடன் பிரிந்த பிறகு, ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின. இருவரும் நண்பர்கள் என்று பின்னர் ராஷ்மிகா கூறினார். அதன்பிறகு கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லை ராஷ்மிகா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதை கில் மறுத்தார். சமீபத்தில், ராஷ்மிகா தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் ஜோடியாக நடித்தார் மற்றும் அவருடன் விருது விழாக்களில் கலந்து கொண்டார், மேலும் இருவரும் காதலிப்பதாக தெலுங்கு சினிமா உலகில் வதந்திகள் பரவி வருகின்றன.
நேற்று தனது 26 வது பிறந்தநாளை கொண்டாடிய ராஷ்மிகா மந்தனா ரியல் எஸ்டேட்டில் ஆர்வத்துடன் நாடு முழுவதும் சில ஆடம்பர சொத்துக்களில் முதலீடு செய்திருக்கிறார். அவருக்கு பெங்களூரில் ரூ.8 கோடி மதிப்பில் பெரிய மாளிகை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராகவும் இவர் உள்ளார். பாலிவுட்டில் ஆடம்பர கார்களை வைத்திருப்பதில் விருப்பம் கொண்ட நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். ராஷ்மிகா ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ்-சி கிளாஸ் கார், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி கியூ3 கார்களை வைத்திருக்கிறார்.
இந்த கார்கள் தவிர, டொயோட்டா இனோவா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களையும் வைத்திருக்கிறார். 2023 ம் ஆண்டு நிலவரப்படி, ராஷ்மிகா மந்தனாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.65 கோடி ஆகும். இவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.8 கோடியாகும். ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு சுமார் ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிப்பு, பெர்ஃபார்மர், என்டோர்ஸ்மென்ட் மற்றும் மாடலிங் என பல துறைகளிலும் இவர் வருமானம் ஈட்டி வருகிறார்.