Skip to content
Home » சினிமாவில் இருந்து விலக ராஷ்மிகா முடிவா?…மனக்குமுறல் பேட்டி….

சினிமாவில் இருந்து விலக ராஷ்மிகா முடிவா?…மனக்குமுறல் பேட்டி….

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார், இதுவே விஜய்யுடன் இவர் நடிக்கும் முதல் படமாகும்.  வாரிசு படத்தில் பெரியளவில் ராஷ்மிகாவிற்கு நடிப்பு இல்லை என்றாலும், விஜய் தனக்கு பிடித்த நடிகர் என்பதாலேயே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறி இருந்தார்.

ராஷ்மிகாவின் சிரிப்பு, வொர்க்அவுட், பேச்சு, முகபாவனை என அனைத்தையும் சமீப காலமாக பலரும் டிரோல் செய்து வருகின்றனர். தனக்கு வரும் மோசமான கமெண்டுகளால் மனமுடைந்து இருக்கும் ராஷ்மிகா தற்போது தனது மனக்குமுறலை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். பிரேமா தி ஜர்னலிஸ்ட் சேனலிடம் அவர் கூறியதாவது:- “மக்களுக்கு என் உடலிலேயே பிரச்சனை இருக்கிறது. நான் வொர்க்அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறார்கள், வொர்க்அவுட் செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள். நான் அதிகமாக பேசினால் கிரிஞ்ச் என்று சொல்கிறார்கள், பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாக சொல்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனை நான் மூச்சு விடவில்லையென்றாலும் அவர்களுக்கு பிரச்னை, நான் என்னதான் செய்வது?” நான் சினிமாவில் இருந்த  விலக வேண்டுமா?இருக்க வேண்டுமா? என்று பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கள் தன்னை பற்றி கூறும் கருத்துக்கள் சரியானதாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இதுபோன்று தவறாக கூறுவது என் மனதை பாதிக்கிறது. என்னுடன் உங்களுக்கு பிரச்சனை என்றால், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். துஷ்பிரயோகம் செய்யாதீர்கள், அவர்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் நம்மில் சிலரை மனதளவில் பாதிக்கிறது என கூறி உள்ளார். எப்போதும் ராஷ்மிகா குறும்புத்தனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவர் தற்போது இப்படி மனக்கலக்கத்துடன் பேசியிருப்பது ரசிகர்களை கண்கலங்க செய்து இருக்கிறது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *