மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியில் புகழேந்தி என்பவரது தனியார் தோட்டத்தில் உள்ள வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.,
பின்பு பாம்பு பிடி வீரர் சுரேஷ் புகழேந்தி வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்த போது இந்த பாம்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் அரிய வகை பாம்பு எனவும் இந்த பாம்பின் இனம் மிகவும் குறைவாக உள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். பின்பு பிடிபட்ட இந்த அரிய வகை பாம்பை ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியார் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக வனத்துறையினர் விடப்பட்டனர்.