வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்( 30). இவர் கடந்த 2022 ம் ஆண்டு கீழகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை வாங்கித் தருவதாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை கற்பழித்து உள்ளார்.
இது குறித்து அந்த பெண்ணின் அண்ணன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் சத்யராஜுக்கு 17 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வித்து தீர்ப்பளித்தார். இதன் பின்னர் போலீசார் சத்யராஜ் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.