மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியில் இருந்து போஷ்ரி பகுதிக்கு தனது 10 மாத குழந்தையுடன் செல்ல பெண் நேற்று காலை வாடகை கார் புக் செய்துள்ளார். கார் அவரை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளது. அப்போது, அந்த வாடகை காரில் மேலும் சில பயணிகள் இருந்துள்ளனர். இதையடுத்து, தனது குழந்தையுடன் அந்த காரில் அப்பெண் பயணித்துள்ளார். இந்நிலையில், கார் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் பல்ஹர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது காரில் இருந்த பயணிகளும், கார் டிரைவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொண்டுள்ளனர். பின்னர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அப்பெண்ணின் 10 மாத குழந்தையை ஓடும் காரில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணையும் காரில் இருந்து வெளியே வீசியுள்ளனர். காரில் இருந்து தூக்கிவிசப்பட்ட நிலையில் அந்த பெண்ணின் 10 மாத குழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.