பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முகாம் நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், திருச்சி மண்டல இராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (20.06.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர்(பொ) ராதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…
- by Authour
