Skip to content

ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும்  சீமானை  கண்டித்து அந்த கட்சி நிர்வாகிகள்  கட்சிக்கு முழுக்கு போட்டு வருகிறார்கள்.  நேற்று  மகளிர் அணியை சேர்ந்த  காளியம்மன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில்  நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் தனது விலகளை அறிவித்து உள்ளார்.

கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் என பாவேந்தன் குற்றம் சாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் விலகியுள்ளார். 2019-ல் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தல், 2021-ல் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில்  நா.த.க. சார்பில் போட்டியிட்டவர் பாவேந்தன்.

error: Content is protected !!