கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக யு. ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை பெயர் உத்திரமுத்து, ராணி பிறந்த தேதி 1.9.1981. நாகர்கோவில் மேலராமன்புதூர் பூங்கா அவெனியூ என்ற முகவரியில் வசிக்கிறார். பிஏ பட்டதாரி, கிறிஸ்தவர். நிலா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
