ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிய பிரித்விஷா 379 ரகளை விளாசி புதிய சாதனையை படைத்திருக்கிறார். அசாம் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடிய ஆட்டத்திலே இந்த சாதனை படைக்கப்பட்டது. பிரித்விஷா முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 240 ரகளை குவித்திருந்தார். இதனை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் தனது அதிரடியை பிரித்திவிஷா தொடர்ந்தார். பிரிதிவிஷாவை கட்டுப்படுத்த முடியாமல் அசாம் வீரர்கள் திணறினர். இதனை பயன்படுத்திக் கொண்ட பிரித்வி சா 383 பந்துகளை எதிர் கொண்டு 379 ரன்கள் விளாசிய நிலையில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
49 பவுண்டரிகள் இதில் 49 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். இதேபோன்று இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஜிங்கே ரஹானே 191 ரன்களை விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பிரித்வி ஷா தவித்து வந்தார். கண்டுகொள்ளவே மாட்டேன் இதனால் ஏற்பட்ட விரத்தியால் கடந்த சில போட்டிகளில் அவர் தொடர்ந்து சொதப்பினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பார்ம்க்கு திரும்பியுள்ளார்.இது குறித்து பேசிய அவர் 379 ரன்கள் அடித்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் 400 ரன்கள் அடித்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன். நான் சரியாக விளையாடாத காலத்தில் எனக்கு ஆதரவு அளிக்காதவர்கள் குறித்து நான் கண்டுகொள்ளவே மாட்டேன். யோசிக்கவே இல்லை இந்திய அணிக்கு திரும்புவது குறித்து நான் யோசிக்கவே இல்லை. தற்போது என்னுடைய கவனம் எல்லாம் மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பை வெல்ல வேண்டும். நான் கடுமையாக உழைத்து வருகிறேன்.
எனக்கு நான் நேர்மையாக இருக்கிறேன். உணவு பழக்கத்திலும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன் என்று பிரித்வி ஷா கூறினார். இந்த இன்னிங்ஸ் மூலம் ரஞ்சி கிரிக்கெட்டில் 350 ரன்கள் அடித்த ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலே பாகுஷாகிப் நிம்பல்கர் என்ற வீரர் 443 ரன்கள் அடித்தது இன்று வரை சாதனையாக இருக்கிறது. பிரித்வி ஷா 379 ரன்களும், சஞ்சய் மஞ்சுரக்கர் 377 ரன்கள் அடித்திருக்கிறார்கள்.