சில திரைப்படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு சர்வதேச யோகா பயிற்சியாளராக பணியாற்றிவர் லோவல் தவான். அங்கு இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் யோகா ஆசிரியரான லோவல் தவானை திருமணம் செய்யவுள்ளதாக ரம்யா பாண்டியன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். ரம்யா பாண்டியனுக்கும் லோவல தவானுக்கும் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் இன்று திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் 15ம் தேதி திருமண வரவேற்பு நடக்கிறது.