தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகனாக அவர் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தியாவார். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழுந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இந்த தம்பதி, தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து சமீபத்தில் வளைக்காப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக கூறியிருந்தனர். பெண் குழந்தையை பெற்றெடுத்த ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு சமூக வலைத்தளம் வாயிலாக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.