திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும்
வரும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் இன்று செவ்வாய்க்கிழமை மட்றப்பள்ளி சந்தையில் அதிக அளவில் மாடுகள், ஆடுகள், கோழிகள், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு மாடு ரூபாய்1000 முதல் 50000 வரையிலும் ஆடுகள் ரூபாய்1000 முதல்10000 வரையிலும் கோழிகள் ரூபாய்400 முதல் 700 வரை விற்பனை செய்கிறார்கள். பின்பு அனைவரும் ரம்ஜான் பண்டிகைக்காக அதிகப்படியான விலையை பார்க்காமல் ஆடுகளையும், மாடுகளையும், கோழிகளையும், வாங்கி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.