முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து சொர்கம் செல்ல வேண்டுமானால் தூதர் முஹம்மத் அவர்களை பின்பற்றவேண்டும். முஹம்மத் நபி அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளார்கள் என்பதால் அதை சார்ந்து தொப்பி அணிகிறார்கள்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் 50 ஆயிரம்க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர்.
11 தேதி நாளை ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக நடைபெறுவதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியில்
தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்துள்ளனர்.
பள்ளப்பட்டி பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொப்பியுடன் தான் அதிகம் காணப்படுவார்கள் அதுவும் ரமலான் மாதம் வந்தால் தொப்பி கடைகளில் கூட்டங்கள் அலை மோதுவது வழக்கம் அந்த வகையில் நூறு வருட பாரம்பரியமிக்க ஒரு பழமை மிகு தொப்பி கடையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொப்பிகள் வாங்கி செல்கின்றனர்.
150ரூபாய் துவங்கி 700 ரூபாய் வரை காட்டன், , மாப்பிள்ளை தொப்பி என்ற ரகத்தில் விற்பனை நடைபெற்றது.சுமார் இன்று மட்டும் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆனதாக தெரிவித்துள்ளனர்.
நாளை ரமலான் நோன்பு கொண்டாடுவதற்காக தொப்பிகள், வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர்.அதேபோன்று இனிப்பு கடைகளும் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.