ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் நோன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளிவாசல்களில் தினமும் மாலையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு பிறகு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசலில் மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் போற்றும் வகையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.
இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என அனைவரும் ஒன்று இணைந்து நோன்பு திறப்பு விழா பங்குபெற்று இஸ்லாமிய உணவுகளை அருந்தினார்.
பின்னர் அனைவரும் கட்டி அணைத்து அன்புகளை பரிமாறிக் கொண்டனர்.