தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ரமலானை முன்னிட்டு 42 வது ஆண்டாக ஏழமை நிலையிலுள்ள இராஜகிரி, இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி வழங்கப் பட்டன. இராஜகிரி பெரிய பள்ளி வாசலில் நடைப் பெற்ற நிகழ்வில் ரமலான் அன்பளிப்பாக ரூ.800 மதிப்பில் 750 பேருக்கு சேலை, கைலி, பாசுமதி அரிசி ஆகியன வழங்கப் பட்டன. இதில் வெல்பேர் தலைவர் காசிம், பெரிய பள்ளித் தலைவர் யூசுப் அலி, பெரிய பள்ளி, வெல்பேர் நிர்வாகிகள் மற்றும் ஜமா அத்தினர் கலந்துக் கொண்டனர்.