நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும்.
தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.
கல்வராயன்மலை மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பட்டாபிராம் வரை விரிவாக்கம் செய்யப்படும்.
மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும். தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தால் பராமரிக்கப்படவிருக்கும் இவ்விடுதிகளின் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்விற்கென, நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையாததாகும். எனவே, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.