புதுச்சேரி பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததற்கு கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது அறிவிப்புக்கு அன்புமணியும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமதாஸ் கோபமடைந்தார்.
இதனை தொடர்ந்து மேடையில் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுகிட்ட அன்புமணி ராமதாஸ் பனையூரில் தன்னுடைய அலுவலகம் இருப்பதாகவும் தன்னை சந்திக்க விரும்புபவர்கள் அங்கே வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார். கட்சியை நிறுவியது நான்தான் நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் வெளியே செல்லலாம் என்றும் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.