இயக்குநர் நித்தேஷ் திவாரி ராமாயணம் படத்தை எடுக்க உள்ளார். ராமர் மற்றும் சீதை வேடங்களில் உண்மையான ஜோடியான இந்தி திரைப்பட நடிகர்களான ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார். ஆலியா பட் 2022-ம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் முன்பே சீதை வேடம் ஏற்று நடித்து உள்ளார். இதேபோன்று ராமாயணம் படத்தில் ராவணன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் கே.ஜி.எப். பட புகழ் நடிகர் யாஷ் பெயர் அடிபடுகிறது.
ஆலியா பட் வாழ்நாள் முழுமைக்கும் பெருமையளிக்க கூடிய ஒரு வேடத்தில் நடிக்கும் உற்சாகத்தில் உள்ளார். ரன்பீர் கபூரும் கடவுள் ராமராக நடிக்கும் ஆர்வத்தில் உள்ளார். அல்லு அரவிந்த், மது மந்தனா மற்றும் நமீத் மல்கோத்ரா உள்ளிட்டோரும் படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வர உள்ளது.