சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசும் போது, “தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன். கால்வலி என்பதால் பங்கேற்கவில்லை. பெரியார் பல்கலைக்கழக விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. விருப்பமனுக்கள் பெற்ற பின்னர் கழக மூத்த நிர்வாகிகள் மூலம், யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு இறுதி செய்யப்படும்” என்றார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அதிமுக பங்கேற்குமா என விளக்கம்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அதிமுக பங்கேற்குமா என விளக்கம்
மேலும், “மிக்ஜாம் புயலில் பெரிய அளவில் காற்று இல்லை. கனமழையால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே சென்னை மாநகரத்தில் வடிகால் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. மக்களின் உடைமைகள் சேதம் அடைந்தன. மூன்று நாட்கள் உணவு இன்றி தவித்தனர். முழுமையான வடிகால் வசதி செய்து கொடுத்ததாக பொய்யான தகவலை வெளியிட்டதால்தான் மக்கள் இந்த பாதிப்பை சந்தித்தனர்.
தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த பின்னரும், மிக்ஜாம் புயலை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். இந்த வேலையில் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அப்படி என்றால் மக்களை உதாசீனப்படுத்திவிட்டனர். அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்” என்றார்.
முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – இபிஎஸ்
முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – இபிஎஸ்
தொடர்ந்து பேசிய அவர், “போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கையை பல முறை வலியுறுத்தியும் அரசு நிறைவேற்றவில்லை. அவர்களின் குறைந்தபட்ச கோரிக்கையையும் அரசு நிராகரித்து விட்டது. அதனால் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர். உயர் நீதிமன்ற வலியுறுத்தல்படி அவர்கள் இப்போது பணிக்கு திரும்பி உள்ளார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் தொழிலாளர்கள் கேட்கிறார்கள். ஆனால், அதனை எதிர்த்து தொழிலாளர்கள் மீது அக்கறையில்லாமல் உச்ச நீதிமன்றம் வரை இந்த அரசு சென்றுள்ளது. தொழில் முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன், இதுவரை அவர்கள் வெளியிடவில்லை” என்றார்.