உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று வந்தடைந்தார். பின்னர் குழந்தை ராமரின் கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி பூஜைகளுக்கு பின் அகற்றப்பட்டது. நகைகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை ராமர் ஜொலித்தார். இதனை தொடர்ந்து பாலராமர் சிலைக்கு தாமரை மலரால் பூஜித்தார் பிரதமர் மோடி. பின்னர் குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை
நிறைவு பெற்றது. குழந்தை ராமர் கோயில் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகளை செய்தார் பிரதமர் மோடி. ராமர் சிலை பாதத்தில் மலர் வைத்து மனமுருக பிராத்தனை செய்தார். ராமர் சிலைக்கு தீபாரதனை காட்டினார் பிரதமர் மோடி. அயோத்தி நகர் முழுவதும் காவி கொடியுடன் பக்தர்கள் கூட்டம்அலைமோதியது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர்கள், முதல்வர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரோ தலைவர்
\
சோம்நாத், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், தனுஷ், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, கங்கனா ரணவத், மாதுரி தீட்சித், கத்ரீனா கைப், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜாக்கி ஷெராப், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், அனில் கும்ளே உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல், துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்….