உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவும், நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவும் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.