உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள். நோன்பு இருந்து இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் தலைமை காஜி அறிவிப்பின் படி இன்று முதல் நோன்பு துவங்கியது.முதல் ரமலான் நோன்பு துவங்கியதை அடுத்து பள்ளிவாசல்களில் திராவீஹ் எனப்படும் சிறப்பு இரவு
தொழுகை நடைபெற்றது.கோவையில் உள்ள பெரும்பாலான பள்ளி வாசல்களில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறை தொழுகையில் ஈடுபட்டனர்…ரமலான் மாதம் முழுவதும் முப்பது நாட்களும் இந்த இரவு நேர தொழுகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது..