அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்க ளால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச் சோலை அருகே காவிரி ஆற்று கரையோரம் கிடந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீ சார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு வழக்கு சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனாலும் கொலையாளி களை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கில் குற்றவாளி களை கண்டுபிடிக்க தூத்துக் குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வுக்குழுவில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் இடம் பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக் கின் விசாரணை அதிகாரி ஜெயகுமார் கட லூர் போலீஸ் சூப்பிரண் டாக பணியிடமாற்றம் செய் யப்பட்டதால் புலன் விசா ரணை பாதிக்கப்பட்டுள்ள தாகவும், அவருக்கு பதிலாக திருச்சி மற்றும் அருகே உள்ள மாவட்டத்தில் உள்ளவர்களை விசாரணை அதிகாரிக ளாக நியமித்தால் வழக்கில் புலன் விசாரணைக்கு உதவி யாக இருக்கும் என தமிழக காவல்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோர்ட்டில் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், போலீஸ் சூப்பிரெண்டு ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி டிஐஜி வருண்குமார், தஞ்சை எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை சிறப்பு புலனாய்வுக்குழுவில் கூடுதலாக நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
புதிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தற்போதுசிறப்பு புலனாய்வுக் குழுவில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் சண்முகவேல் மாநகர சைபர்கிரைம் பிரிவுக்கும். போலீஸ் ஏட்டுகள் ராஜ பிரபு மற்றும் தனசேகரன் ஆகி யோர் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக் கும். போலீஸ் ஏட்டு பிலிப்ஸ் |பிரபாகரன் மாநகர குற்றப்பி ரிவு 2-க்கும் அதிரடியாக இட் மாற்றம் செய்யப்பட்டனர்.மாநகர போலீஸ் கமிஷனர் காமினி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக்குழுவில் பணியாற்றிய 4 பேர் இடமாற்றப் பட்டதை தொடர்ந்து, புலனாய்வுக்குழுவில் புதிய அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.