திமுக முதன்மைச் செயலாளரும் ,தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் கே. என். நேரு, திருச்சி தொகுதி திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் துரை வைகோ உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன், மற்றும் ஏராளமானோர் வந்திருந்து மரியாதை செலுத்தினர்.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் புதூர் பூமிநாதன்,மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.ராசமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.