Skip to content
Home » நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக தோற்று இருக்கும்….அமெரிக்காவில் ராகுல் பேட்டி

நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக தோற்று இருக்கும்….அமெரிக்காவில் ராகுல் பேட்டி

  • by Senthil

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி  அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வருகிறார் அந்த வகையில்,  தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது. பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. அவரது பார்வை வேறு விதமாக உள்ளது.எனது பார்வை வேறு விதமாக உள்ளது.

அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம். நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் செய்த சேதத்தை சரி செய்வது கடினமான பிரச்சினை. புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை தாக்குவது உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது சவாலானது. நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது. தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் விரும்பியதை எல்லாம் செய்தது. அவர்கள்(பாஜக) பலவீனமாக உள்ள மாநிலங்கள் ஒரு விதமாகவும், பலமாக உள்ள மாநிலங்கள் ஒருவிதமாகவும் வடிவமைத்தனர்.எனவே, அதை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே கருதுகிறேன். நாட்டின் அமைப்புகள் கைப்பற்றப்படன. இதை மக்களும் முதலில் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!