ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: அதானி எல்லா தொழில்களிலும் வெற்றி மட்டுமே பெறுகிறார். இது என்ன மேஜிக் என்று தெரியவில்லை,ஜனாதிபதி உரைலயில் வேலையின்மை, விலைவாசி குறித்து ஒரு வார்த்தை வட இல்லை. மே பெறுகிறார் .மோடி- அதானி இடையேயான உறவு பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதைப்பற்றி இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். பல்வேறு துறைகளிலும் அதானி குழுமம் நுழைந்து விட்டது. எதிலும் அதானி மட்டுமே இருக்கிறார். அவர் எந்த தொழிலிலும் தோல்வி அடைவதில்லை.
ஒற்றுமை யாத்திரையில் பலவற்றறை கற்றேன். மக்களின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டேன். அந்த யாத்திரையின்போது மக்கள் என்னிடம் பல விஷயங்களை தெரிவித்தனர். விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். தமிழ்நாடு, கேரளா முதல் காஷ்மீர் வரை எல்லா இடங்களிலும் அதானி மட்டுமே. சில வருடங்களில் அவரது சொத்து மதிப்பு மட்டும் எப்படி 140 பில்லியன் டாலர் உயர்ந்தது. ? விவசாயிகள், இளைஞர்கள் வேதனையில் உள்ளனர். வேலைகளில் இருந்து நீக்கப்படுவதாக இளைஞர்கள் வேதனையுடன் கூறினார்கள். அனைத்து துறைகளிலும் அதானி குழுமம் நுழைந்து விட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா- இஸ்ரேல் ஆயுத வர்த்தகத்தில் 90 % அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராகுல்பேசிக்கொண்டிருந்தபோது இடையிடையே பாஜ. எம்.பிக்கள் எழும்பி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவரை பேசும்படி சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். தொடர்ந்து ராகுல் பேசினார்.