மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிறுத்திவைத்து உத்தரவிட்ட.
இதையடுத்து தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெறும் மக்களவை கூட்டத்தில் ராகுல் பங்கேற்பார். அல்லது நாளை பங்கேற்பார் என தெரிகிறது.