நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக நாளை அவர் தமிழகம் வருகிறார். நெல்லை பாளையங்கோட்டையில் நெல்லை- திருச்செந்தூா் சாலையில் உள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பிராமண்ட கூட்டத்தில் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணிஸ்ரீகுமார், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த், மற்றும் விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாதுகாப்பு விதிமுறைகளை கருத்தில் கொண்டு இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.