Skip to content
Home » .காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

.காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

  • by Senthil

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில்  ராகுல்  உரையாற்றினார். தேர்தல் பிரசார முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

, “ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ​​நான் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தேன். ஜம்மு – காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸுக்கு மிகவும் முக்கியமானது என்று நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை வழங்க விரும்புவதால், முதலில் ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், வேதனை மற்றும் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம். ஜம்மு காஷ்மீரில் யாரேனும் அச்சமின்றி உழைத்திருந்தால் அது காங்கிரஸ்காரர்தான். அதனால் நீங்கள் பட்ட துயரங்கள் எனக்குத் தெரியும். இதற்குப் பிறகும் நீங்கள் காங்கிரஸின் சித்தாந்தத்துக்காக போராடுகிறீர்கள். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காக உங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளீர்கள்.

ஜம்மு காஷ்மீர் மீதான எனது அன்பு, நேசம் மிகவும் ஆழமானது. இது மிகப் பழமையான உறவு. ரத்த உறவு. சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி இருக்கும். அது காங்கிரஸ் தொண்டர்களின் மரியாதையைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருக்கும்.

மக்களவைத் தேர்தலின்போது இண்டியா கூட்டணி நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், இண்டியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார். வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்க வேண்டும் என்பதையே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி. வெறுப்பை அன்பினால் வெல்லலாம். மேலும், ஒற்றுமையின் மூலம் நாம் வெறுப்பை அன்பால் தோற்கடிப்போம்” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பலர்பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!