Skip to content
Home » தேர்தல் முடிவுகளும், டிவி ஒளிபரப்பும்…..தலைமைதேர்தல் ஆணையர் வேதனை

தேர்தல் முடிவுகளும், டிவி ஒளிபரப்பும்…..தலைமைதேர்தல் ஆணையர் வேதனை

  • by Authour

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

ஓட்டு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு  தேவையில்லாத பிரச்னைகளை  ஏற்படுத்துகிறது.  இதை நாங்கள் தடுக்க முடியாது.  கருத்து கணிப்பு வெளியிடுவோர் அதுபற்றி சிந்திக்கவேண்டும்.   கடந்த சில தேர்தல் முடிவுகள் , கருத்து கணிப்புகளுக்கு எதிராகவே அமைந்து இருக்கிறது.  ஓட்டு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தான் தொடங்குகிறோம.  முன்னணி நிலவரம் தெரியவர காலை 9 மணிக்கு மேல் ஆகி விடும். ஓட்டு எண்ணும் இடத்தில் உள்ளவர்களுக்கே 9 மணிக்கு தான் முன்னணி தெரியவரும். ஆனால் டிவிக்களில் 8.30 மணிக்கே முன்னணி நிலவரம் போடுகிறார்கள். இது எப்படி என தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *