Skip to content
Home » அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் காமராஜர் சிலை முன் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 21 ஆம் தேதி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதி, மனிதநேயம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினை பொதுமக்களிடையே எடுத்துக் கூறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட, வட்டார, நகர, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!