பாஜகவின் கடந்த ஆட்சியில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருந்தவர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராகி அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி்யில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரில் சுமார் 16ஆயிரம் வாக்குகள் வித்தி்யாசத்தி்ல் தோல்வி அடைந்தார். இந்த நி்லையில் மீண்டும் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தார். ஆனால் பாஜக மேலிடம் இவரை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் ராஜீவ் சந்திரசேகர் 18 ஆண்டுகால பொதுவாழ்வில் இருந்து விலகுகி்றேன் என தனது சமூகவலைதள பக்கத்தில் பதவிட்டிருந்தார். திடீரென அதை நீக்கிவிட்டார். தனது அடமின் அதை பதிவிட்டதாக கூறி உள்ளார். ஆனாலும் ராஜீவ் சந்திரசேகர் பாஜகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவுக்கு முழுக்கு போடுவார் என்றும் கூறப்படுகிறது.