அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இருந்தவர் வி.எம். சுதாகர் . இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
அவரது மறைவை, ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்…அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி .சுதாகர் உடல்நல குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என கூறப்பட்டு உள்ளது.