நடிகர் ரஜினி காந்தின் 74 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக அவர் நடிக்கும் 170 வது திரைப்படத்தின் தலைப்பை இன்று மாலை வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்தது. அந்த வகையில் ஞானவேல் இயக்கும் அந்த புதிய படத்தின் பெயர் வேட்டையன் என லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான டீசரும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் அபிதாப், பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது..