ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினிகாந்தை சந்தித்ததாக, மலேசிய பிரதமர் நெகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது
படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில், மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் “ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.