உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில் சமீபத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.
இந்த சூழலில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகளை காண முக்கிய பிரபலங்களுக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உலக கோப்பை போட்டிகளை கண்டு ரசிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிசிசிஐ-யிடமிருந்து மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அன்புள்ள ஜெய் ஷா ஜி… உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், எண்ணங்களுக்கும் மிக்க நன்றி”என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.